உள்ளூர் செய்திகள்

மருத்துவம் சார் படிப்பு: வகுப்புகள் துவக்கம்

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரியில், மருந்துவம் சார் படிப்புகளுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கின. 125 மாணவ, மாணவியர் இதில் சேர்ந்துள்ளனர். பி.பார்ம் உள்ளிட்ட மருந்துவம் சார்ந்த படிப்புக்களுக்கான கவுன்சிலிங் முடிந்து, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவர்களுக்கான வகுப்பு நேற்று தொடங்கியது. சென்னை மருத்துவக் கல்லூரியில், 125 மாணவ, மாணவியர் புதிதாக வந்தனர். பிற்பகலில், வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. டீன் கனகசபை, மாணவ, மாணவியரை வரவேற்று, வாழ்த்து தெரிவித்தார். தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளிலும், மருத்துவம் சார் படிப்புகள் தொடங்கியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்