உள்ளூர் செய்திகள்

ஐ.ஓ.பி.யில் ஆயிரம் பேருக்கு புதிய வேலை!

கிளார்க் பணிக்கு ஆயிரம் பேரைத் தேர்வு செய்ய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் அதிகாரிகள் பணிக்கு 200 பேரைத் தேர்வு செய்ய சௌத் இந்தியன் வங்கியும் திட்டமிட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு மட்டும் 360 பேரைத் தேர்வு செய்ய ஐ.ஓ.பி., திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் 25 ஆயிரம் பேரைத் தேர்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதுதவிர, அதன் இணை வங்கிகளுக்கு 4,200 பேரைத் தேர்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்