அமிர்தசரஸ் நகருக்கு வரப்போகிறது ஒரு ஐ.ஐ.எம்!
அமிர்தசரஸ்: நாட்டில் புதிதாக துவக்கப்படவுள்ள 5 ஐ.ஐ.எம்.,களில் ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் அமையவுள்ளது. இந்த ஐ.ஐ.எம்., அம்மாநிலத்தின் முக்கிய நகரான அமிர்தசரஸ் நகரில் அமையவிருக்கிறது என்று அம்மாநில துணைமுதல்வர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார். "அமிர்தசரஸ் நகரில் ஐ.ஐ.எம்., அமைவதானது, ஏற்கனவே பொற்கோவிலால் உலகப் புகழ்பெற்றுள்ள அந்த நகரம், மேலும் முன்னேற்றமடையும்" முந்தைய பிரதமர், அமிர்தசரஸ் நகரை சேர்ந்தவராக இருந்தும், நகர வளர்ச்சிக்கென்று எந்த பயனுள்ள நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை" என்று சுக்பீர் சிங் பாதல் கூறினார். பஞ்சாப் தவிர, இதர 4 ஐ.ஐ.எம்.,களும் இமாச்சலப் பிரதேசம், பீகார், ஒடிசா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் அமையவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.