உடல்நல மாணவர் சங்க துவக்க விழா
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், உடல்நல மாணவர் சங்க துவக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன் வரவேற்றார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஞானப்பூ, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். உடல்நல மாணவர் சங்கத்தை சுகாதார ஆய்வாளர் சீனுவாசன் துவக்கி வைத்து பேசினார். உடல்நல மாணவர் சங்க பொறுப்பு ஆசிரியர் மலர்விழி நன்றி கூறினார்.