அரசுப் பள்ளியில் ஆசிரியையை அறைந்த மாணவன்!
சென்னை: அரசு பள்ளியில், மாணவனால், ஆசிரியை தாக்கப்பட்ட சம்பவத்தால், கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை, மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையின் உட்புறத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.நேற்று முன்தினம், மதிய வகுப்பின்போது, ஆசிரியை லட்சுமி, 36, கணினி ஆய்வகத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தார். அப்போது, ஆலப்பாக்கம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த மாணவர், கணினியை தவறாக கையாண்டதாக கூறப்படுகிறது. ஆசிரியை கண்டித்தார். ஆத்திரமடைந்த அந்த மாணவன், திடீரென ஆசிரியையின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதில், ஆசிரியைக்கு காதில் காயம் ஏற்பட்டது. பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் சுவாமிநாதன், பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.