உள்ளூர் செய்திகள்

சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல்சான்றிதழ்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஜூன்-ஜூலை மாதத்தில், பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, கடந்த மாதம் 24ம் தேதி முதல் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இத்தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அக்., 20ம் தேதி வரை மட்டுமே செல்லத் தக்கதாகும். மேற்படி தேர்விற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்களுக்கும், இன்று காலை, 10:00 மணி முதல் 9ம் தேதி வரை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் அலுவலக நேரத்தில் வினியோகம் செய்யப்பட உள்ளது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நேதாஜி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஏ.எம்.எஸ்.,பள்ளியிலும் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. வரும் 9ம் தேதிக்கு பிறகு சம்பந்தப்பட்ட அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்று 12ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்களுக்கும், தற்போது அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. வரும் 4ம் தேதி வரை சான்றிதழ்கள், தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் வழங்கப்படும். 4ம் தேதிக்கு பின், சம்பந்தப்பட்ட அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்