உள்ளூர் செய்திகள்

வீரதீர செயல்கள் புரிந்த மாணவர்களுக்கு விருது

கோவை: மத்திய குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ், வீரதீர செயல்கள் புரிந்த குழந்தைகளுக்கு தேசிய விருதுக்கான விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.கடந்த, 1957 ஆண்டு முதல் குழந்தைகளுக்கான வீரதிர செயல்பாடுகளுக்கு தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது, ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைக்கு வழங்கப்படும். இவ்விருதுக்கு, 2014 ஜூலை, 1ம் தேதி முதல், 2015 ஜூன் 30ம் தேதி வரை நடந்த செயல்பாடுகள் கருத்தில் கொள்ளப்படும்.பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை, குழந்தைகள் நல வாரியம், மாவட்ட நிர்வாக பொறுப்பு அதிகாரிகள் இவ்விருதுக்கான குழந்தைகளை பரிந்துரைக்கலாம். இம்மாதம், 30ம் தேதிக்கு முன்பு பரிந்துரை கடிதங்களை அனுப்பவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்