உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சிப் பட்டறை நிறைவு

புதுச்சேரி: முத்தரையர்பாளையம் இளங்கோவடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களுக்கு ௫ நாள் பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழா நடந்தது. விரிவுரையாளர் பார்த்திபன் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குனர் கிருஷ்ணராஜ், பயிற்சி பெற்ற 60 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். அரசு பள்ளிகளைச் சேர்ந்த இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் விரிவுரையாளர்கள் பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மதிவாணன், அன்பழகன், ஜான் வெஸ்லி, சுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர். விரிவுரையாளர் சண்முகமுருகன் நன்றி கூறினார்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்