மாணவர்கள் பரதம் ஆடி கின்னஸ் சாதனை!
ஆடவல்லான் இசைத்தமிழ் அறக்கட்டளை சார்பில், உலக பொதுமறையில் ஓர் உலகசாதனை என்னும் நிகழ்வு திண்டுக்கல் ஜி.டி.என்.கல்லுாரியில் நடந்தது. திருக்குறளில் உள்ள அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பாலில் இருந்து 10 குறள்கள் வீதம் 30 குறள்கள் பாடல்களாக வடிவமைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த 2,650 மாணவ, மாணவிகள், திருக்குறளுக்கு 30 நிமிடம் பரதம் ஆடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இதுவரை 2,100 பேர் :பங்கேற்ற பரதநாட்டியம் மட்டுமே கின்னஸ் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக இது அமைந்துள்ளது.இதில் ஆசியா புத்தக சாதனை நிபுணர் விவேக் நாயர், ஜெட்லி தலைமை வகித்தனர். இந்திரா வரவேற்றார். ஈஸ்வர் ஆனந்த், ரிதம் கம்போஷர் கோகிலன் ஆகியோர் இசையமைத்தனர். கண்ணன், கமல கண்ணன், சிவ பிரகாஷ், செல்வம் ஆகியோர் பாடினர். கலைமாமணி இந்திராஜன், திருச்சி கலை பண்பாட்டு துறை இயக்குனர் குணசேகரன், ஜி.டி.என்.கல்லுாரி இயக்குனர் மார்க்கண்டேயன் பங்கேற்றனர். இசையமைப்பாளர் ஈஸ்வர் ஆனந்த்: உலக அளவில் முதன்முறையாக திருக்குறளை பாடலாக்கி, பரதநாட்டியம் ஆடியுள்ளனர். 30 குறள்களுக்கு என் நண்பர்களுடன் இணைந்து இசையமைத்துள்ளேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவி தீஷ்யா,(மதுரை): சிறுவயதிலிருந்தே பரதம் கற்று வருகிறேன். கின்னஸ் சாதனையில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. 30 நிமிடம் இடைவிடாது ஆடியது இதுவே முதல் முறை.