எட்டாம் தேதி உலக சாதனை நிகழ்வு!
சத்தி: சத்தியமங்கலம் சாரு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில், வரும், 8ம் தேதி உலக சாதனை நிகழ்வு நடக்கிறது. 67வது குடியரசு தினத்தை முன்னிட்டு, இப்பள்ளியை சேர்ந்த, 758 மாணவ, மாணவிகள் ஒரு மீட்டர் நீளம், 0.66 மீட்டர் அகலம் கொண்ட வெள்ளை துணியில், 758 தேசிய கொடிகளை வலது கை கட்டை விரல் ரேகை வைத்து உருவாக்குகின்றனர். இதற்காக, 2,300 லிட்டர் தேசிய கொடி கலர் பெயிண்ட் பயன்படுத்தப்படுகிறது. இதை ஆய்வு செய்து அங்கீகாரம் செய்ய சிங்கப்பூர் மற்றும் மும்பை அகாடமிகளை சேர்ந்த நிறுவன பிரதிநிதிகள் வருகின்றனர்.