மத்திய பிரதேசம்; பெண் வீராங்கனை சாதனை
இந்துார்: மத்திய பிரதேச மாநிலம், இந்துாருக்கு அருகேயுள்ள பகுதியில், மகர சங்கராந்தியை முன்னிட்டு, மல்யுத்தம் உட்பட, பல போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், மல்யுத்தப் போட்டியில், பெண்கள் பிரிவில் பங்கேற்ற, 21 வயது இளம் வீராங்கனையான ராணி ரானா, ஆண்கள் பிரிவில் போட்டியிடத் தயாராக உள்ளதாக சவால் விட்டார். அதன்படி, போட்டியில் பங்கேற்ற அவர், ஒரு நிமிடத்துக்குள் தன்னை எதிர்த்த வீரரை வீழ்த்தி, வெற்றி பெற்றார். போட்டியைப் பார்த்த அனைவரும், ராணியைப் பாராட்டினர்.