உள்ளூர் செய்திகள்

டி.சி.எஸ்., நிறுவனத்துடன் கிருஷ்ணா கல்லூரி ஒப்பந்தம்

கோவை: கோவைப்புதுாரிலுள்ள கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரியின், முதலாமாண்டு விழா மற்றும் டி.சி.எஸ்., நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், டி.சி.எஸ்., நிறுவன இணை துணைத் தலைவர் ராஜிவ் நொரானா பேசுகையில், போட்டி மிகுந்த இவ்வுலகில், வளர்ச்சிமிக்க இந்தியாவை உருவாக்க, திறமையான இளைஞர்கள் தேவை. தொடர் கல்வியுடன், தங்களை புதுப்பித்துக்கொண்டே இருந்தால், நினைத்த இலக்கை அடைய முடியும், என்றார். வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல பிரிவுகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு டி.சி.எஸ்., நிறுவனம் சார்பில் பயிற்சியளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ராஜிவ்நொரானா மற்றும் மலர்விழி ஆகியோர் கையெழுத்திட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்