உள்ளூர் செய்திகள்

விவசாயம் அல்லாத புதிய வேலைவாய்ப்புகள் தேவை

புதுடில்லி: மக்கள்தொகைக்கு ஏற்ப, அடுத்த 10 ஆண்டுகளில் விவசாயம் அல்லாத துறைகளில் 11.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். டில்லியில் நடைபெற்ற புதிய கண்டுபிடிப்புகள் குறித்த சர்வதேச வட்டமேசை கண்காட்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது: இளைஞர்களின் படைப்புத்திறன், அறிவாற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, நாட்டை வளப்படுத்த வேண்டும் எனும் நோக்கில் ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது. இளைஞர்கள் சுயதொழில் துவக்குவதை ஊக்குவிக்க இத்திட்டம் முக்கியத்துவம் அளிக்கும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது முக்கியம். அத்துடன் சமூகத்தை உள்ளடக்கிய பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதும் நிபுணர்களுக்கு பெரும் சவால் நிறைந்தது. பெருகி வரும் மக்கள்தொகையை கணக்கில் கொண்டு, அடுத்து வரும் 10 ஆண்டுகளில் விவசாயம் அல்லாத துறைகளில் 11.5 கோடி வேலைவாய்ப்புகள் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்