உள்ளூர் செய்திகள்

பொறியியல் கவுன்சிலிங் தயா கல்லூரி வழக்கு

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி குடும்பத்தினருக்குச் சொந்தமான, தயா பொறியியல் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரி நிர்வாகம் சார்பில் ஜெயகரண் கிரப்,&' கல்லுாரியில் அடிப்படை வசதிகள் உள்ளன. மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் பட்டியலில், கல்லுாரி பெயரை சேர்க்க, சென்னை அண்ணா பல்கலையில் மனு செய்தோம். மனுவை பரிசீலித்து கவுன்சிலிங் பட்டியலில் சேர்த்து, கோடு எண் வழங்க பல்கலைக்கு உத்தரவிட வேண்டும்,&' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். நீதிபதி எம்.வேணுகோபால், பல்கலை பதிவாளர் ஜூன் 9 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டார். மனுதாரர் வழக்கறிஞர் சிவராமன், பல்கலை வழக்கறிஞர் ராஜராஜன் ஆஜராயினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்