உள்ளூர் செய்திகள்

புத்தகக் காட்சியில் இன்று ’மகளிர் தினம்’

மாலை, 6:00 மணிக்கு, பபாசி செயற்குழு உறுப்பினர் ஷைலஜா,ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன், ஊடகவியலாளர் கே.எஸ்.சுஜிதா, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், காந்தளகம் நிரந்தர புத்தகக் காட்சி உறுப்பினர் சசிரேகா பாலசுப்பிரமணியம் பங்கேற்கின்றனர். கலை செல்வங்களை கொணரும் புதிய மொழிபெயர்ப்பு புதிய கலைகள்,- பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் மேலைநாடுகளில் பெருமளவு வளர்ந்து வருகின்றன. உலகத்துடன் இணைந்து பயணிக்க, தமிழில் அவற்றை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனால், சென்றிடுவீர் எட்டுத் திக்கும்;- கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்றார் பாரதியார். அதற்கு மொழிபெயர்ப்பு மட்டும் தான் கை கொடுக்கும். தற்காலத்தில், தமிழில் மொழிபெயர்ப்பு நுால்களின் நிலையும், மொழிபெயர்ப்பாளர்களின் நிலையும் எவ்வாறு உள்ளன என்பது குறித்து, மொழிபெயர்ப்பாளர் மருதன் கூறியதாவது: அனைத்து வாசகர்களாலும், பல மொழிகளை கற்று, அவற்றில் உள்ள சிறந்த படைப்புகளை வாசிக்க இயலாதது. அந்த குறையை, மொழிபெயர்ப்பு நுால்கள் போக்குகின்றன. தமிழில், பெரும்பாலான மொழிபெயர்ப்புகள், ஆங்கிலத்தில் இருந்தே வந்துள்ளன. அதிலும், அதிகம் பேசப்பட்ட, விற்கப்பட்ட புத்தகங்களே மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக, புதினம், வரலாறு, மருத்துவம், சமூகம், அரசியல், வாழ்க்கை வரலாறு,  அறிவியல், வர்த்தகம், ஆய்வு, சுய முன்னேற்றம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த மொழிபெயர்ப்பு நுால்கள், தமிழில் கிடைக்கின்றன. ஒருமொழிபெயர்ப்பு மூலநுாலுக்கு நேர்மையானதாகவும், வாசிப்பதற்கு எளிமையானதாகவும் இருக்க வேண்டும். எல்லா மொழிபெயர்ப்பு நுால்களும் கொண்டாட கூடியவையாக இல்லை. நல்ல மொழிபெயர்ப்பை தேடிப்பிடித்து வாங்குவது, ஒரு சவாலாகவே உள்ளது. புனைவு அல்லாதவற்றில், எழுத்து நடையைவிட தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். புனைகதையில் நுாலாசிரியர் சொல்வதை, அப்படியே, அதே நடையில் சொல்ல வேண்டும். தற்காலத்தில், மொழிபெயர்ப்பு நுால்களுக்கு, பெரிய வரவேற்பு இல்லை. அதனால், மொழிபெயர்ப்பாளர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. ராயல்டி குறைவாகவே நிர்ணயிக்கப்படுகிறது. அதுவும் முறையாக தரப்படுவதில்லை. அதனால், முழு நேரமும் மொழிபெயர்ப்பில் ஈடுபட முடிவதில்லை. மொழிபெயர்ப்பின் தரம் குறைந்ததற்கு இவையெல்லாம் முக்கியக் காரணங்கள். இவ்வாறு அவர் கூறினார். முக்கியத்துவம் தரும் பதிப்பகங்கள் சில... பாரதி புத்தகாலயம், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், எதிர் வெளியீடு, காலச்சுவடு, சந்தியா பதிப்பகம், அடையாளம், விடியல், கிழக்கு பதிப்பகம் தரமற்ற பெயர்ப்புகள் எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தை, மொழிபெயர்த்து தள்ளுபவர்கள் அதிகம் உள்ளனர்தனக்குப் பிடிக்காத, கடினமான பகுதிகளை, அம்போ வென்று விட்டுவிடுவது, இடையிடையே சொந்த கருத்துகளைச்சூசகமாக நுழைப்பது உள்ளிட்ட தவறுகளை பலர் செய்கின்றனர்சிலர், மூலநுாலை உள்வாங்காமல், குறைபுரிதலுடன் மொழிபெயர்க்கின்றனர்.தவறுகள் ஏன்?துறை சார்ந்த, தேர்ச்சி பெற்ற மொழி பெயர்ப்பாளர்கள் கிடைப்பதில்லைஆர்வத்தால் மொழிபெயர்க்க வரும் பலர், வாசிப்பை பரவலாக்குவதிலும், கலை சொற்களை அறிவதிலும் ஆர்வம் காட்டுவதில்லைமுக்கியமாக, மூலத்தோடு ஒப்பிட்டு, மொழிபெயர்ப்பை செப்பனிடும் திறனுடைய, எடிட்டர்கள் கிடைப்பதில்லை. புத்தகக் காட்சியில், 267ம் எண் அரங்கில், ஸ்பேஸ் கிட்ஸ் என்ற நிறுவனத்தின், மாணவர்களுக்கு வானியல் அறிவை ஏற்படுத்தும் வகையிலான தொழில்நுட்பங்கள் அடங்கிய பொருட்கள் உள்ளன. ஸ்பேஸ் கிட்ஸ் அரங்கை, ரஷ்ய துாதரகத்தின் சென்னை துாதர் மிக்கேல் கார்ப்பதோவ், நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். பின், வீணான பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட, சிறிய ரக ஆளில்லா விமானத்தை, அந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் இயக்கி காட்டினர். அதே அரங்கில், வானியல் சார்ந்த வீடியோ பதிவுகள், மினியேச்சர்கள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகளுடன் செல்வோர், கட்டாயம் பார்க்க வேண்டிய அரங்குகளில் ஒன்று, ஸ்பேஸ் கிட்ஸ்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்