வேலைவாய்ப்பின்மை: ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு அ.தி.மு.க., பதில்
சென்னை; தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக கூறிய குற்றச்சாட்டுக்கு, அ.தி.மு.க.,வினர் புள்ளி விபரங்களுடன் பதிலடி கொடுத்து வருகின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக, ஏப்ரல் மாதம், வேலைவாய்ப்பின்மை, 49.8 சதவீதமாக அதிகரித்திருந்தது. அதைத் தொடர்ந்து, ஊரடங்கு நாட்களில்,விவசாயப் பணிகள் மேற்கொள்ள தடையில்லை என, முதல்வர் அறிவித்தார்.இதன் காரணமாக, விவசாயம் சார்ந்த தொழில்கள், தடையின்றி நடந்தன.கடும் கண்டனம்கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, சிகிச்சை அளிப்பதற்காக, 1,769 மருத்துவர்கள் உட்பட, 10 ஆயிரத்து, 661 மருத்துவப் பணியாளர்கள், அரசால் நியமிக்கப்பட்டனர். அடுத்தடுத்து, அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக, மே மாதம் வேலைவாய்ப்பின்மை சதவீதம், 33 ஆக குறைந்தது. கடந்த மாதம், வேலைவாய்ப்பின்மை, 8.1 சதவீத மாக குறைந்துள்ளது.வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், கொரோனா ஊரடங்கு காலத்திலும், அதிகமுதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இக்காலத்தில், 30 ஆயிரத்து, 664 கோடி ரூபாய் முதலீடுகள், தமிழகத்திற்கு கிடைத்துள்ளன .வேலைவாய்ப்பின்மை சதவீதம், 49.8ல் இருந்து, 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம், 49.8 சதவீதமாக அதிகரித்துள்ளது என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.இதற்கு, அ.தி.மு.க.,வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அரசு உறுதிஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி, &'&'தினமும் காலையில், ஏதாவது கருத்து சொல்றேன்னு, தப்பான புள்ளி விபரங்களை சொல்றதே, இவருக்கு வேலையா போச்சு. &'&'கொரோனா உச்சத்தில் இருந்த, ஏப்ரல் மாத புள்ளி விபரத்தை, ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டு, அவர் ஒரு விஷயமறியா வாரிசு என்று, மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்,&'&' என, தெரிவித்துள்ளார்.செய்தித் துறை அமைச்சர் ராஜு, &'&'ஸ்டாலினுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் கிடையாது என்பது, உலகறிந்த விஷயம். துண்டுச்சீட்டு எழுதிக் கொடுக்கும் ஆட்களிடமாவது, சரியான தகவலை கேட்டு பெறுங்கள்,&'&' என, தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க., - ஐ.டி., அணி சென்னை மண்டல பொறுப்பாளர் அஸ்பயர் சுவாமிநாதன், &'&'டிசம்பரில், தமிழகத்தில், 5.7 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை, கொரோனாவால் ஏப்ரல் மாதம், 49.8 சதவீதமாக அதிகரித்தது. &'&'தமிழக அரசின் தீவிர முயற்சியால், ஜூலை மாதம், 8.1 சதவீதமாக குறைந்துள்ளது. அரசின் முயற்சியை, பொய் அறிக்கை மறைக்குமோ...&'&' என, கேட்டுஉள்ளார்.அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் சத்யன், &'&'வேலைவாய்ப்பின்மை, 8.1 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா காலத்திலும், 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்த்து, வேலைவாய்ப்பை அரசு உறுதி செய்துள்ளது,&'&' என தெரிவித்துள்ளார்.