உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் பட்டய படிப்பு சிப்பெட் அழைப்பு

சென்னை; இளநிலை மற்றும் முதுநிலை பட்டய படிப்பில் சேர, சென்னையில் உள்ள, &'சிப்பெட்&' என்ற, மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், அழைப்பு விடுத்து உள்ளது.&'சிப்பெட்&' வெளியிட்ட செய்திக்குறிப்பு:சிப்பெட்டில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டய படிப்பில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நடப்பு, 2020 - 2021ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, தற்போது துவங்கப்பட்டுள்ளது.&'பிளாஸ்டிக் பிராசஸிங் மற்றும் டெஸ்டிங்கில்&' இரண்டு ஆண்டு முதுநிலை பட்டய படிப்பு; &'பிளாஸ்டிக் மோல்டு&' தொழில்நுட்பம் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தில், மூன்று ஆண்டு பட்டய படிப்புகளில் சேர, செப்., 7க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். சிப்பெட்டில் பட்டய படிப்பு முடித்தவர்கள், அண்ணா பல்கலையில், &'லேட்டரல் என்ட்ரி&' வாயிலாக, பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தில், பி.டெக்., படிப்பில் சேர தகுதி உடையவர். மாணவர் சேர்க்கை தொடர்பான மேலும் விபரங்களுக்கு, சிப்பெட் மேலாளர் பீர்முகமதுவை, 94446 22771 என்ற, மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்