உள்ளூர் செய்திகள்

ஐ.டி., துறையில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

மதுரை: தகவல் தொழில்நுட்பத்துறையில் (ஐ.டி.,) கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதன் மூலம் உலகளாவிய போட்டியை சந்திக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது, என மதுரையில் நடந்த ஐ.டி.,துறை அதிகாரிகளுடனான காணொளி கருத்தரங்கில் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.கிராமப்புற பகுதிகளில் ஐ.டி., வேலைவாய்ப்புகள் என்ற தலைப்பில் ஐ.டி., துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, அதிகாரிகள் சந்தோஷ்குமார் மிஸ்ரா, ரமண சரஸ்வதி, தென்காசி ஜோேஹா நிறுவன தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் உள்ளிட்டோருடன் அமைச்சர் கலந்துரையாடினார்.பின் அமைச்சர் கூறியதாவது: ஐ.டி., துறையில் நகர்ப்புற, கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த செப்., முதல், 2ம் வாரங்களில் &'டைகான் குளோபல் லெவன்த் எடிஷன் ஆப் சோர்ஸ் இந்தியா&' மற்றும் &'கனெக்ட் 2020&' மாநாடுகள் நடக்கின்றன. முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார். அமெரிக்க சுற்றுபயணத்தின் போது ஜோேஹா நிறுவன தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் முதல்வரை சந்தித்த போது தன் சொந்த மாவட்டம் தென்காசியில் ஐ.டி., நிறுவனம் துவங்கி வேலைவாய்ப்பு அளித்ததாக தெரிவித்தார். அதன்படி சுரண்டை, குன்னத்துார், தருவை உள்ளிட்ட ஆறு இடங்களில் 25 இருக்கைகளை கொண்ட கிராமிய செயற்கை கோள் அலுவலகங்களை நிறுவ உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.மார்ச் முதல் அந்நிறுவனம் கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தியதில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் சொந்த ஊரில் இருந்து பணி செய்ய விரும்புவது தெரிந்தது.தற்போது அரசு முயற்சியால் கிராமப்புற இளைஞர்கள் தங்கள் சொந்த ஊரில் வேலைவாய்ப்பு பெறும் நிலை உருவாகியுள்ளது.மென்பொருளை எந்த இடத்திலிருந்தும் உருவாக்கலாம். ஆனால் கணினி பொறியாளர்கள் நகரங்களை நாடுகின்றனர். நகரங்களில் நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண புதிய முயற்சியாக கிராமங்களில் ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது. பாரத் நெட் மூலம் அதிவேக இணையதள வசதி கிராமங்களில் செய்யப்படும். இதன்மூலம் கிராமங்களில் இளைஞர்கள் அதிக சம்பளத்தில் வேலைபெறும் நிலை ஏற்படும், என்றார். கலெக்டர் வினய், டி.ஆர்.ஓ., செல்வராஜ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்