பிரின்டிங் டெக்னாலஜி வேலை வாய்ப்பு எப்படி?
தொடர்பியல் துறையில் மிகவும் சக்தி வாய்ந்தது, அச்சு ஊடகங்கள்! புத்தகம், செய்தித்தாள் போன்றவைகளில் எவ்வாறு சொற்கள் அச்சிடப்படுகின்றன? அதன் தொழில்நுட்பங்கள் என்ன? என்பதை கற்றுக் கொடுக்கும் பிரத்யேக படிப்பு பிரின்டிங் டெக்னாலஜி.என்ன கற்கலாம்அச்சகங்களின் செயல்பாடுகள் மற்றும் நுட்பங்கள், லித்தோகிராபி மற்றும் ஆப்செட் பிரின்டிங், டிஜிட்டல் பிரின்டிங், கிராபிக்ஸ் மற்றும் டிசைன், ப்ளேட்ஸ், இங்க், அச்சு தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள், நிறங்கள், மென்பொருள் டிஜிட்டல் பைல் ஸ்டோரேஜ், மெட்டீரியல் சயின்ஸ், டெக்னாலஜி ஆப் பிரின்டிங் அண்ட் பேக்கேஜிங், சயின்ஸ் அண்ட் மேத்மெடிக்ஸ், வர்த்தகம் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட பாடப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன.படிப்புகள் மற்றும் தகுதிகள்டிப்ளமோ இன் பிரின்டிங் (3 ஆண்டுகள்): கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக பயின்று பத்தாம் வகுப்ப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பி.டெக்., / பி.இ., பிரின்டிங் மற்றும் பேக்கேஜிங் டெக்னாலஜி (4 ஆண்டுகள்): இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை முதன்மை பாடமாக எடுத்து பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பி.வோகேஷனல் இன் பிரின்டிங் டெக்னாலஜி மற்றும் பிரின்டிங் அண்ட் பப்ளிஷிங் (3 ஆண்டுகள்): பிளஸ் 2வில் தேர்ச்சி.எம்.இ., / எம்.டெக்., பிரின்டிங் டெக்னாலஜி (2 ஆண்டுகள்): பி.டெக்., அல்லது பி.இ., பிரின்டிங் அல்லது பேக்கேஜிங் டெக்னாலஜி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வேலை வாய்ப்புமத்திய மற்றும் மாநில அச்சு நிறுவனங்கள், ஆப்செட் பிரிண்டிங், ப்ளெக்சோகிராபி, ஸ்கிரீன் பிரிண்டிங், தனியார் அச்சு ஆலைகள், வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் பிரின்டிங், மென்பொருள் அச்சு தொழில் நிறுவனம், மின்னணு அச்சு வெளியீடு, கலர் மேனேஜ்மெண்ட் சொல்யூசன் மற்றும் பேக்கேஜிங், புத்தக வெளியீட்டு நிறுவனங்கள், அச்சக இயந்திரத் தயாரிப்பு நிறுவனங்கள், இ-பப்ளிஷிங் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் இப்படிப்பைப் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். தற்போது பிரின்டிங் டெக்னாலஜி படித்த மாணவர்கள் சாப்ட்வேர் நிறுவனங்களிலும் வேலைக்கு சேரலாம்.