உள்ளூர் செய்திகள்

இலவச லேப்டாப் வழங்கக் கோரி வழக்கு

மதுரை: இலவச &'லேப்டாப்&' வழங்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரைச் சேர்ந்த காவுதீன் தொடர்ந்த பொதுநல மனு: அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், கல்லுாரி மாணவர்களுக்கு இலவச &'லேப்டாப்&' வழங்கப்படுகிறது. 2017 - 18 கல்வியாண்டில், பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கவில்லை.இதனால், இணைய தொழில்நுட்ப வசதியை பயன்படுத்த முடியாத பல மாணவர்கள், உயர் கல்வி போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை. கொரோனாவால், &'ஆன்லைன்&' வகுப்புகள் நடக்கின்றன. அதில் லேப்டாப் இல்லாத மாணவர்கள் பங்கேற்க இயலவில்லை.2017- - 18 கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, குறிப்பிட்டார். நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு, சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை செயலர், பள்ளிக்கல்வித் துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு மார்ச், 4க்கு ஒத்தி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்