உள்ளூர் செய்திகள்

பல்கலைக்கழக செயல்பாடு குறித்து கருத்துகேட்கிறது இக்னோ

புதுடில்லி: இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கில், பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. பல்கலைக்கழகம் வழங்கும் கல்வி முறை, ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை ஆகியவை குறித்தும் பாடப்புத்தகங்கள், வீடியோ மற்றும் ஆடியோ வடிவில் வழங்கப்படும் பாடங்கள் குறித்தும், மாணவர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. பல்கலைக்கழக மண்டல அலுவலர்கள் மாணவர்களுக்கு உரிய காலத்தில் பாடப் புத்தகங்களை வழங்குகிறார்களா என்றும் மாணவர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. பல்கலைக்கழக செயல்பாடு குறித்த தங்களது கருத்துக்களை மாணவர்கள் இக்னோ (http://www.ignou.ac.in/) இணையதளத்தின் வாயிலாக வெளிப்படுத்தலாம். பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். மாணவர்கள் அளிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்