உள்ளூர் செய்திகள்

வனக்கல்லூரியில் மாணவர்கள் ரத்தம் சிந்தி போராட்டம்!

மேட்டுப்பாளையம், வனக்கல் லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வனவியல் பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., ஆராய்ச்சி பாடப்பிரிவுகள் உள்ளன. நூற்றுக்கும் மேற் பட்ட மாணவ, மாணவியர் படிக் கின்றனர். வனவியல் பட்டதாரிகளுக்கு நேரடியாக வனத்துறையில் வனச்சரகர் (ரேஞ்சர்) பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாணவ, மாணவியர் கடந்த 20 ம் தேதி முதல் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலையில் கறுப்பு துணி கட்டியும், கை விரலில் ஊசியால் குத்தி ரத்தத்தை வெள்ளைத் துணியில் பொட்டு போல வைத்து, வாசகங்களை அமைத்தும் நூதன போராட்டம் நடத்தினர்.மாணவர்கள் கூறியதாவது: தமிழகத்தில், மேட்டுப்பாளையத்தில் மட்டுமே வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு வனவியல் சம்பந்தமான பாடம் நடத்தப்படுகிறது. இதே போன்று, இந்தியாவில் பிற மாநிலங்களிலும் வனக்கல்லூரிகள் உள்ளன. அங்கு, வனவியல் பட்டதாரிகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் நேரடியாக வனச்சரகர்  பதவியை வழங்குகின்றன. ஆனால், தமிழகத்தில் அது போன்று பணி வாய்ப்பு அளிப்பதில்லை. இது தொழில்நுட்பக் கல்வியை போன்று உள்ளதால், வனவியல் படித்து விட்டு வேறு எந்த துறைக்கும் வேலைக்கு செல்ல முடியாது. எனவே, வனத் துறையில் வனச்சரகர் பணி வழங்கும்படி போராட்டம் நடத்தி வருகிறோம்.எங்களுக்கு முன் இங்கு படித்த மாணவ, மாணவியரும்  25 ஆண்டுகளாக இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளனர்; ஆனால், எவ்வித பலனும் இல்லாமல் போய்விட் டது. தற்போது, நாங்களும் போராட் டம் நடத்துகிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை, வகுப்பை புறக்கணித்து போராட்டத்தை தொடருவோம். எங்களது கைவிரலில் ஊசியால் குத்தி, ரத்தம் சிந்தி வெள்ளை துணியில் கோரிக்கை வாசகத்தை எழுதும் போராட்டத்தை நடத்தியுள்ளோம். இவ்வாறு, மாணவர்கள் தெரிவித்தனர். மாணவ, மாணவியரின் ரத்தம் சிந்தும் போராட்டம் காரணமாக கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்