பள்ளி வாகனங்கள்: போக்குவரத்து ஆணையம் எச்சரிக்கை
இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: சுப்ரீம் கோர்ட் வழங்கிய வழிகாட்டுதலின்படி, மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பள்ளி வாகனங்களில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட, அதிகமான மாணவர்களை ஏற்றி செல்வதாக புகார்கள் வருகின்றன. அந்த வகையான வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு அதன் அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும். மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை முறையாக பராமரித்து இயக்கவும அவற்றை தினமும் சோதனை செய்யவும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.