உள்ளூர் செய்திகள்

ஜாதி மோதல்களை தவிர்க்க மாணவர்களிடம் சமத்துவக்குழு

தமிழகத்தில் குறிப்பிட்ட ஜாதி பிரிவினர் வசிக்கும் இடங்களில் அடிக்கடி மோதல்கள் ஏற்படுகிறது. சிறிய பிரச்னைகள் கூட மக்களின் சகிப்பு தன்மை இல்லாததால் பெரிய மோதலாக உருவெடுக்கிறது. இது பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடமும் எதிரொலித்து மோதலை உருவாக்குகிறது. இந்த மோதல் கிராமங்களுக்குகிடையே கலவரமாக வெடிக்கிறது. இவ்வாறு ஜாதி ரீதியாக மோதல்கள் ஏற்படும் இடங்கள் மற்றும் பள்ளிகள் குறித்த பட்டியலை போலீசார் தயாரித்துள்ளனர். பிரச்னை ஏற்படாமல் தடுக்க மாணவர்களை மன ரீதியாக தயார் படுத்த கலந்துரையாடல் நடத்த வேண்டும். இதற்காக போலீஸ், வருவாய்த்துறை, கல்வித்துறையினர் இணைந்த ஒரு குழு அமைக்க வேண்டும். இந்த குழுவினர் சம்பந்தப்பட்ட பள்ளியில் உள்ள மாணவர்களை தேர்வு செய்து சமத்துவக்குழு அமைக்க வேண்டும். இந்த குழுவினர் அனைத்து மாணவர்களிடமும் ஒற்றுமையை போதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்