உள்ளூர் செய்திகள்

பயிற்சி டாக்டர்களிடம் கட்டாய வசூல் புகார்

பயிற்சியின் நிறைவில், ஒவ்வொரு துறை பேராசிரியர்களிடம் கையொப்பம் பெற்ற பிறகு, பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு துறையிலும் கையொப்பம் பெற கட்டாயம் 2,000 முதல் 6,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக பயிற்சி மருத்துவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். டீன் நிர்மலாவிடம் கேட்டதற்கு, இப்பிரச்சனை குறித்து பேராசிரியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பயிற்சி மருத்துவர்கள் தானாக முன் வந்து தான் கல்லுாரியின் வளர்ச்சி பணிகளுக்காக பணம் கொடுத்ததாக தெரிவித்தனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்