ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு சாகித்ய அகாடமி விருது
கேரள சாகித்ய அகாடமி, இந்த ஆண்டுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. ஷினிலால் எழுதிய சம்பர்க்க கிராந்தி சிறந்த நாவலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேத்யூ எழுதிய முழக்கம் சிறந்த சிறுகதைத் தொகுப்பாகவும், ஸ்ரீகுமார் எழுதிய சக்கர மாம்பழம் சிறந்த குழந்தை இலக்கியமாகவும், உண்ணிகிருஷ்ணன் எழுதிய கடலாஸ் சிறந்த கவிதை நுாலாகவும், எமில் மாதவியின் குமரு சிறந்த நாடகமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கொச்சி மாநகர போலீஸ் கமிஷனராக பணிபுரியும் சேதுராமன் எழுதிய மலையாளி: ஒரு ஜனிதக வாயன மற்றும் முரளீதரன் எழுதிய பாஷாசூத்திரம்: பொருளும் வழிகளும் ஆகிய நுால்கள் சிறந்த புலமை இலக்கியங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சேதுராமனின் பெற்றோர் இடுக்கி மாவட்டம் மூணாறில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக பணிபுரிந்தனர். கடந்த 2003ம் ஆண்டு கேரள கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வு பெற்ற சேதுராமன் தமிழ், மலையாள இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்.