ஆசிரியர் பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு: விண்ணப்பம் வரவேற்பு
ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க ஜூலை 15 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்சிடிஇ) நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்திற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளது. தகுதியான அனைத்து விண்ணப்பதாரர்களும் ஜூலை 19 வரை www. nta.ac.in மற்றும் https://ncet.samarth.ac.in/ ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்த கடைசி தேதி ஜூலை 19ம் தேதி வரை. விண்ணப்படிவத்தில் திருத்தம் செய்ய ஜூலை 20, 21 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளலாம். தேர்வுத் தேதி, தேசிய தேர்வு முகமையின்(என்டிஏ) அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வுக்கான அனுமதி அட்டையை தேர்வுத் தேதிக்கு 3 நாட்களுக்கு முன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான தகுதி ப்ளஸ் 2வில் குறைந்தபட்சமாக 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு www. nta.ac.in மற்றும் https://ncet.samarth.ac.in/ ஆகிய இணையதளங்களை பார்க்கலாம்.