உள்ளூர் செய்திகள்

இறகுப்பந்து போட்டி: ராமகிருஷ்ணா கல்லூரி சாம்பியன்

கோவை: மாநில அளவிலான சீனியர் இறகுப்பந்து போட்டியில், ராமகிருஷ்ணா கல்லுாரி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.தமிழ்நாடு மாநில சீனியர் ரேங்கிங் இறகுப்பந்து போட்டி, சென்னை பயர்வால் அகாடமி வளாகத்தில் நடந்தது. கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மாணவியர் ஆத்யாவாரியத், சானியா ஆகியோர் இரட்டையர் பிரிவில் பங்கேற்றனர். இதன் காலிறுதியில் ராமகிருஷ்ணா கல்லுாரி மாணவியர், யுவஸ்ரீ - அக்சயா ஜோடியை, 2 - 0 என்ற செட்கணக்கிலும்; அரையிறுதியில், ஸ்ரேயா, தன்யா ஜோடியை, 2 - 1 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.இறுதிப்போட்டியில் ஆத்யாவாரியத்,- சானியா, 2 - 0 என்ற புள்ளிக்கணக்கில் ரிதுவர்ஷினி, தீப்தா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றனர். இதேபோல், கர்நாடகா மாநிலத்தில் நடந்த,&'யோனெக்ஸ் சன்ரைஸ் ரேங்கிங்&' போட்டியில், வைபவ்ஸ்ரீநாத், ராஷ்மி ஆகியோர் பதக்கம் வென்றனர். வெற்றி பெற்றவர்களை,எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார், உடற்கல்வி இயக்குனர் வடிவேலு ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்