உள்ளூர் செய்திகள்

சட்ட உதவி மைய பணிக்கு நேர்காணல்

திருப்பூர்: தேசிய சட்ட உதவி மைய பணிக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் நேர்காணல் நடைபெறுகிறது.தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், சட்ட உதவி மையம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில், அலுவலக உதவியாளர், கிளார்க், வரவேற்பாளர், டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு ஒப்பந்த முறையில் தற்காலிக ஊழியர்கள் நியமனத்துக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் மற்றும் தகுதி தேர்வு வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. விண்ணப்பித்தோர் விவரங்களை https://districts.ecourts.gov.in/tiruppur என்ற முகவரியில் அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்