உள்ளூர் செய்திகள்

உயர் கல்வி மன்ற இணையதளம் மூடல்

சென்னை: நம் நாளிதழில் செய்தி வெளியான நிலையில், தமிழக அரசு உயர் கல்வி மன்றத்தின் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகள் மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்டத்தை, தமிழக உயர் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த பொது பாடத்திட்டத்துக்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல கல்லுாரிகள், அதை அமல்படுத்த மறுத்துள்ளன. புதிய பாடத்திட்டத்தை தயாரித்த உயர் கல்வி மன்றம், தன் இணையத்தில் கூட, பழைய பாடத்திட்டத்தை மறக்காமல் வைத்திருப்பதாகவும், கடந்த ஆட்சி கால தகவல்களுடன், இன்னும் செயல்படுவதாகவும், கல்வியாளர்கள் புகார் தெரிவித்தனர்.இதுகுறித்து, தினமலர் நாளிதழில் கடந்த வாரம் செய்தி வெளியானது. இதையடுத்து, உயர் கல்வி மன்ற இணையதளம் அவசரமாக மூடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தை பதிவேற்றும் வகையிலும், புதிய தகவல்கள் இடம்பெறும் விதமாகவும், இணையதளத்தை புதுப்பிக்க, உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்