தென்னை ஓலையில் திருக்குறள் அசத்திய மாணவர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த வஜாஹத், 17, தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.இவர், தென்னை ஓலையில், 1,330 திருக்குறள்களையும், 133 தென்னை ஓலையில், 11 மணி நேரம் 36 நிமிடங்கள் எழுதி முடித்தார். இவருக்கு, தனியார் நிறுவனங்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கின. இந்த சான்றிதழ்களுடன், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்தை, நேற்று முன்தினம் மாணவர் சந்தித்தார். அவருக்கு புத்தகங்கள் வழங்கி பாராட்டிய கலெக்டர், பல்வேறு சாதனைகள், படிப்பில் முழு கவனம் செலுத்த ஆலோசனை வழங்கினார். அதன்பின், மாணவர் வஜாஹத்தை, உடன் படிக்கும் பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.