உள்ளூர் செய்திகள்

அரசுத் தேர்வுகளை எளிதாக்கிய நிஜ ஹீரோ

காகன் பிரதாப்பை எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் சிலர், செல்பி எடுத்துக்கொள்ள விரும்புவர்; சிலர் அவரது பாதம் தொட்டு வணங்குவர்; இன்னும் சிலர், கைகுலுக்குவர்; அவர் நடிகரோ, கிரிக்கெட் வீரரோ கிடையாது. அரசு வேலையை விரும்பும் இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு பாடம் நடத்தும் பிரபல ஆசிரியர். அறிவே ஆற்றல். சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியர் மாணவர் மனதில் இருந்து எப்போதும் அகலமாட்டார்.50 லட்சம் மாணவர்காகன் பிரதாப், அவரது நண்பர்கள் மூவரும் இணைந்து கேரியர்வில் என்ற செயலியை உருவாக்கி, அரசுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகின்றனர்; இதில், மாதிரித்தேர்வுகள் இடம்பெறுகின்றன. செயலியில் 50 லட்சம் மாணவர்கள் பதிவு செய்து படித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது, ஆச்சர்யத்தின் உச்சகட்டம். இதில் 12 லட்சம் மாணவர்கள் பணம் செலுத்திப் படிப்பவர்கள். தினசரி 120 நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.அனைத்து போட்டித் தேர்வு கோச்சிங் சென்டர்களும் நகர்ப்புற மாணவர்களை இலக்காக கொண்டிருக்கும்; ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்பாந்தவானாக இருக்கிறது, கேரியர்வில் செயலி. வங்கி, யு.பி.எஸ்.சி., மாநில அளவிலான தேர்வுகள் (சில மாநிலங்கள் மட்டும்), ரயில்வே, ராணுவம், கடற்படை தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.குறைந்த கட்டணம்கிராமப்புற மாணவர்கள் சேர்வதற்கு காரணம், மிகக் குறைந்த கட்டணம். சிறந்த வகுப்புகள், அரசு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அதிக மாணவர்கள், இவர்களது செயலியில் இணைந்துள்ளனர். குறைந்த கட்டணங்கள் வாங்குவதால், குறைவான சம்பளத்தில் தரமான ஆசிரியர்கள் கிடைப்பது இவர்களுக்கு துவக்கத்தில் கஷ்டமாக இருந்தது. நிறுவனம் பிரபலமடைந்தவுடன், இங்கு வேலை பார்ப்பதையே கவுரவமாக கருதி குறைந்த சம்பளத்திற்கு ஆசிரியர்கள் முன்வந்தனர்.நம்பகத்தன்மைதரமான போட்டித் தேர்வு கல்வியை குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கிடைக்க செய்வதே இவர்களது குறிக்கோள்; அதிக ஆசிரியர்கள் கேரியர்வில்-ல் இணைந்ததால், மற்றவர்களுக்கு இவர்கள் மீதான நம்பகத் தன்மை அதிகரித்துள்ளது. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் இணையதளம்: www.careerwill.com- சேதுராமன் சாத்தப்பன் -உங்கள் சந்தேகங்களுக்கு: இ- மெயில்: Sethuraman.sathappan@gmail.com; மொபைல் போன்: 9820451259; இணையதளம் www.startupandbusinessnews.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்