உள்ளூர் செய்திகள்

தஞ்சை வேளாண் கல்லுாரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்

சென்னை: சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:வேளாண் அறிவியலை, 20ம் நுாற்றாண்டில் இந்தியாவுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தும் ஆராய்ச்சிகளை, வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டி, உலக அளவில் புகழ் பெற்றவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.உலகம் அதிகமாக வெப்பமாவதால், கடல் மட்டம் உயரும் என, 1989ம் ஆண்டு டோக்கியோ மாநாட்டில் விஞ்ஞானி சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்தார். தமிழகத்தைச் சேர்ந்த எம்.எஸ்.சுவாமிநாதன், இந்திய அளவில் முத்திரை பதித்து, உலக அளவில் புகழ் பெற்றவர்.அவரது நினைவைப் போற்றும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும்.அதேபோல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில், இளம் வேளாண் அறிவியலின் பயிர் பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில், அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவருக்கு, எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில், ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.இதை வரவேற்று, சட்டசபை கட்சி தலைவர்கள் அனைவரும் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்