விஜயதசமியன்று இசைப்பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
காஞ்சிபுரம்: கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் மாவட்ட அரசு இசை பள்ளி, காஞ்சிபுரம் சதாவரத்தில் இயங்கி வருகிறது.இங்கு, ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் சேர்க்கை நடைபெறும். இதை தொடர்ந்து, விஜயதசமி நாளிலும் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில், இந்தாண்டு நாளை, விஜயதசமியன்று, இசைபள்ளியில் சேர்க்கை நடைபெறும் என, பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமணி தெரிவித்துள்ளார்.இங்கு, குரலிசை, நாதசுவரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின் ஆகிய கலைப்பிரிவுகளில் வகுப்புகள் நடைபெறும். மாதந்தோறும், 400 ரூபாய் கல்வி உதவித்தொகையும், விடுதி வசதியும், இலவச பஸ் பயண சலுகையும் வழங்கப்படும். 12 - 25 வயது வரையிலான ஆண், பெண் என இருபாலரும் சேரலாம்.பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை மற்றும் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரிய முன்னுரிமை வழங்கப்படும்.