துறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
சென்னை: டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள துறைத்தேர்வுகள் எழுத இம்மாதம் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளிட்டுள்ள அறிக்கை:இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள துறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.,26 என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இம்மாதம் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.