ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நிர்வாக மாற்றம்
சென்னை: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனத்தில் நிர்வாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மதிப்பீட்டு பிரிவு கல்வி டிவி பிரிவு மாநில வள மையம் பிரிவுகள் புதிதாக துவங்கப்பட்டு உள்ளன. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மருத்துவ அதிகாரி 14; நுாலகர்கள் பதவியில் 20 இடங்கள் நீக்கப்பட்டுள்ளன. கல்வி தொலைக்காட்சிக்கு ஆண்டுக்கு 3.50 கோடி ரூபாய் செலவில் தனியார் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட உள்ளன.