உள்ளூர் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் பதிவு மூப்பு பட்டியல்

ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம், பதிவு மூப்பு தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை, வேலைவாய்ப்பு இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.பள்ளிக் கல்வித்துறையில், தொடர்ச்சியாக பல்வேறு நிலைகளில் புதிய ஆசிரியர் நியமனங்கள் நடந்து வருகின்றன. பட்டதாரி ஆசிரியர் பிரிவில், நிலுவையில் உள்ள 1,200 பணியிடங்களுக்கான இறுதிப் பட்டியல், பிப்., முதல் வாரத்தில் வெளியாக உள்ளன.இந்நிலையில், அடுத்த கட்டமாக 6,000 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம், பதிவு மூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்த 30 ஆயிரம் பேரின் பட்டியல், வேலை வாய்ப்பு இயக்குனரக இணையதளத்தில் http://www.employment.tn.gov.in வெளியிடப்பட்டுள்ளன. பட்டதாரி ஆசிரியர்கள், தங்களது மாவட்ட, கோட் எண்ணுடன், வேலை வாய்ப்பு பதிவு எண்களையும் சேர்த்து பதிவு செய்தால், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனரா, இல்லையா என்பது தெரிய வரும்.பிப்ரவரி 15ம் தேதிக்குப் பின், முழு விவரங்களும், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. சான்றிதழ் சரிபார்த்தல் பணியை முடித்து, இறுதிப் பட்டியல் மார்ச் இறுதிக்குள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்