மாணவியருடன் கிரிக்கெட்: பிரிட்டிஷ் தூதர் உற்சாகம்
லக்னோ: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று(அக்.,29) லக்னோவில் நடக்கிறது. போட்டியை காண சென்றுள்ள இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லீஸ், பள்ளி மாணவ மாணவியுடன் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.