சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு
இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை: சென்னைப் பல்கலைக்கழகத்தில், 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற் துறைகளில் தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகிறது. எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பி.ஏ. உள்ளிட்ட முதுநிலைப் பட்டத்திற்கான தேர்வு முடிவுகள் இன்றும், எம்.சி.ஏ., எம்.எஸ்சி., (ஐ.டி.,) உள்ளிட்ட புரோபஷனல் துறைக்கான தேர்வு முடிவுகள் பிப. 2ம் தேதியும், பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.சி.ஏ. உள்ளிட்ட இளநிலை பட்டத்திற்கான தேர்வு முடிவுகள், பிப். 7ம் தேதியும் அடுத்தடுத்து வெளியிடப்பட இருக்கின்றன. www.ideunom.ac.in http://kalvimalar.com/Results.asp உள்ளிட இணையதளங்களில் இன்று மாலை முதல் தேர்வு முடிவுகளை அறியலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.