பட்டாசு வெடிப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
காஞ்சிபுரம்: தீபாவளி பண்டிகையின் போது, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு துறை, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.அதன்படி, காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் சி.எஸ்.ஐ., மிஷன் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்பணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சங்கர், பட்டாசு வெடிக்கும்போது தளர்வான ஆடைகளை அணிய கூடாது. பட்டாசு வெடிக்கும் இடத்தின் அருகில், பக்கெட்டில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். ராக்கெட்டுகளை குடிசை இல்லாத வெட்டவெளியில் வெடிக்க வேண்டும்.