உள்ளூர் செய்திகள்

அற்புத படைப்புகள்: திறமையால் ஜொலித்த மாணவர்கள்

திண்டுக்கல்: உலகின் பெரிய உயிரினமாக கருதப்படும் டைனோசரின் வடிவமைப்பை வரவேற்பறையில் அமைத்து அறிவியல், கலை கண்காட்சியின் பிரமாண்டத்தை வார்த்தைகளில் சொல்லாமல் விளக்கியதுதான் ஒட்டுமொத்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இருந்தது. ஐவகை நிலங்களை பறைசாட்டும் தமிழ் பாரம்பரிய பாடத்தை கண்முன் உருவங்களாய் சித்தரித்து செதுக்கிய பிரமாண்டத்தை அளவிட முடியாது. தமிழர்களின் பாரம்பரியம், கீழடி அகழ்வாராய்ச்சிசோதனைகளை அட்டைகளில் தத்ரூபமாக வடிவமைத்திருந்தது மாணவர்களின் கற்பனை திறனுக்கு சவாலாகவே இருந்தது. மனுநீதி சோழனின் நீதி தவறாமையின் பசுவின் கண்ணீரையும், நீதிமணியையும் வடிவமைத்து சுட்டி காட்டியமாணவர்களின் ஒருங்கிணைப்பு செயல்பாடுகளில் ஏட்டுக்கல்வி கண்களுக்கு விருந்தளித்தது. பொங்கல் திருவிழா, ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு, சிலப்பதிகார காவிய படைப்பு என ஒட்டுமொத்த தமிழக கலாசாரத்தையும் நான்குசுவர்களில் உருவங்களாய் வடித்தமையில் மாணவர்களின் பங்கானது மகத்தான தமிழ் சேவையாக மட்டும்தான் தெரிந்தது.அதிலும் பழநி மலைகோயிலின் அழகிய தோற்றத்தை அட்டைகளால் வடிவமைத்து அதன் பின்னணியில் பக்தி பாடலை ஒளிபரப்பியதில் சுற்றுலா வந்த மனதிருப்தியை பார்வையாளர்களுக்கு கொடுத்தது. பெயின்டிங், கருப்பு தாளில் துளையிட்டு படைத்த தலைவர்களின் ஓவியங்களில் வரைகலை புதுமையை புகுத்தியது. இப்படியாக திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டிலுள்ள அட்சுயுதா பள்ளியில் நடந்த அறிவியல், கலை கண்காட்சியில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட படைப்புகளின் சுவடுகள் கண்களுக்கு விருந்தளித்து மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களின் பாராட்டுக்களை ஒருசேர பெற்றன.இளம் ஆராய்ச்சியாளர்கள்சந்திரசேகரன், முதன்மை முதல்வர், அட்சுயுதா பப்ளிக் பள்ளி: கல்லிலே கலைவண்ணம் காணும் கண்களை உருவாக்குவதுதான் இந்த விழாவின் நோக்கமாகும். மாணவர்களின் சிந்தனை களத்திற்கான கண்டுபிடிப்புக்கான விழா எடுக்க பள்ளி தயாரான மறுவிநாடியிலிருந்து மாணவர்கள் ஆசிரியர்களின் துணையோடு சாதனை படைக்க துவங்கி விட்டனர். படைப்பாற்றலின் திறமையில் மாணவர்களின் அர்ப்பணிப்பானது இனியொரு விதி செய்வோம் என்ற பாரதியின் பொன்மொழியை விளக்கியது.தலைநிமிர செய்து விடும்மாரிமுத்து, காந்திகிராம் பல்கலை பேராசிரியர்: வார்த்தைகளின் மேலோட்டமே கவிதையாகிறது. ஆராய்ச்சியே விஞ்ஞானமாகிறது. சாதாரண ஒரு பேப்பரை கசக்கி வீசும்போது நியூட்டன் விதிமுறையில் நிகழும் ஈர்ப்பு விசையில் ஆராய்ச்சி செலுத்தினால் அந்த பேப்பர் பட்டமாகி விடும். பட்டம் விமானமாகி விடும். விமானம் சந்திரயான் ராக்கெட்டாகி இந்தியாவை உலக அளவில் தலைநிமிர செய்து விடும். படைப்புலகிலும் சிகரம் தொடும்மங்களராம், பள்ளி செயலாளர், அட்சுயுதா பள்ளி: கசக்கி எரிந்த துண்டு பேப்பரிலும், காது குடைந்து குப்பைக்கு செல்லும் குச்சிகளையும் பயன்படுத்தி மாணவர்கள் படைத்த அருங்காட்சியக உருவங்கள் உண்மையில் சாதனை பட்டியலில் அவர்களின் பெயர்களை பதிக்க காத்திருக்கின்றன. படைப்புலகிலும் சிகரம் தொடும் என்ற நம்பிக்கையை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.இருப்பதை கொண்டு சாதனை ராகவன், 9ம் வகுப்பு மாணவர்: சந்திரயான் விண்கலத்தை அனுப்பும்போது அதற்கு முன் பலமுயற்சியில் இந்திய விஞ்ஞானிகளின் முயற்சி வீணானது கண்டு புதிய திட்டத்தை வகுத்ததன் விளைவே சந்திரயான் 2 வெற்றியின் பின்னணியாக உள்ளது. சுற்றுவட்ட பாதையில் ஐந்து சுற்றில் பூமியை கடந்து சந்திர மண்டலத்தை அடையும் வியூகத்தில் வளர்ந்த நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி செலவில் ஐந்து மடங்கு செலவை இந்திய விஞ்ஞானிகள் சிக்கன படுத்தி உள்ளார்கள். இருப்பதை கொண்டு சிறப்புடன் சாதிக்கும் தொழில்நுட்பமே இந்திய ஆராய்ச்சி மையத்தின் உன்னத நோக்கமானசெயல்முறையாகும்.செய்முறை கல்வியாகியதுசுப்புலெட்சுமி, தமிழாசிரியர்: தமிழ்துறை சார்பில் வடிவமைக்கப்பட்ட இந்த கூடத்தில் ஐவகை நிலங்களின் சிறப்புகளை வடிக்கும்போதே மாணவர்கள் ஆசிரியர்களான எங்களிடம் விளக்கம் கேட்டதில் பாடம் படித்த புதுமை முறை பழக்கப்பட்டு விட்டது. செய்முறை கல்வியின் சிறப்பிற்கு இதுபோன்ற நிகழ்ச்சி பெரிதளவும் துணைபுரிகின்றன.விஞ்ஞானிகளை உருவாக்கும் பள்ளிஇறைமலர், 11ம் வகுப்பு மாணவி: என்னால் என் பள்ளிக்கு பெருமை. என் பள்ளியால் எனக்கு பெருமை என்ற எண்ணம் இந்த அறிவியல், கலை கண்காட்சி மூலம் மேலோங்கியுள்ளது. எந்த ஒரு பொருளை சிறியதாக நினைத்து கடந்து செல்கிறோமோ அதன் ஆக்கத்திற்கு ஆயிரம் மடங்கு உழைப்பு தேவைப்படுகிறது என்பதை உருவாக்க செய்து ஆசிரியர்கள் எங்களுக்கு உணர்த்தியுள்ளனர். கல்வியில் சிகரம் தொட்ட எம்பள்ளி சிறந்த விஞ்ஞானிகளையும் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதை பெருமையுடன் பின்தொடர்கிறோம்.மாணவ பிரம்மாக்களாக உருவெடுத்துள்ளனர்காந்திமதி, பரதப்பள்ளி ஆசிரியை, திண்டுக்கல்: ஆராய்ச்சியாளர்களின் மாணவ பருவம் இப்படித்தான் இருக்குமோ என்ற பிரமிப்பு இந்த நிகழ்ச்சியின் மூலமாக தென்பட்டது. அதிலும் சந்திராயன் விண்வெளி மைய ஆராய்ச்சி கூட அமைப்பில் மாணவர்களின் பங்களிப்புஅளப்பறியதாகும். ஏட்டு சுரக்காய் கறிக்குதவாது என்ற பழமொழியில் கல்வியை ஒருபடி பின்னோக்கி தள்ளியிருப்பர். ஆனால் மாணவர்களின் இந்த செய்முறை கண்காட்சியின் படைப்பு இந்த பழமொழியை முற்றிலும் தகர்த்து எறிந்துவிட்டது. அத்தனை படைப்பாற்றலை பெற்று மாணவ பிரம்மாக்களாக உருவெடுத்துள்ளனர் இப்பள்ளி மாணவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்