விவசாய தொழிற்கல்வி மாணவர்களுக்கு கள பயிற்சி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில், விவசாய தொழிற்கல்வி பிரிவில், 24 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இவர்களுக்கு, விச்சந்தாங்கல் அரசு தோட்டக்கலை பண்ணையில், விவசாய கள பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமில், கொய்யா பதியம் போடுதல், மண்புழு உரங்கள் தயாரித்தல், பஞ்சகாவியம் தயாரித்தல் ஆகிய பயற்சிகளை உதவி தோட்டக்கலை அலுவலர் தனஞ்செழியன் வழங்கினார்.