உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நாளை மருத்துவ முகாம்

சிவகங்கை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஒன்றியத்தை உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் -18 வயது வரை பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் டிச.6 காலை 10:00 மணி முதல் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.இம்மருத்துவ மதிப்பீட்டு முகாமில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை தனித்துவ அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, இலவச அறுவை சிகிச்சை, ரயில் பயண அட்டை, பஸ் பயண அட்டை கிடைக்க வழிவகை செய்து தரப்படும்.இம்முகாமிற்கு வரும் போது மாற்றுத்திறன் மாணவ மாணவியரின் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அடையாள அட்டை நகல், மருத்துவச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டுவரவேண்டும் என வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு ரூபாராணி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்