உள்ளூர் செய்திகள்

ஸ்மார்ட் கிளாஸ் துவக்கம்: மாணவர்கள் மகிழ்ச்சி

வால்பாறை: பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் துவங்கப்பட்டதால், நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறை அடுத்துள்ள முடீஸ் அரசு உதவி பெறும் மத்திய நடுநிலைப்பள்ளியில், பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த, 130 மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் எஸ்டேட் நிர்வாகத்தின் பங்களிப்புடன், ஸ்மார்ட் கிளாஸ் முதன் முறையாக துவங்கப்பட்டது.துவக்க விழாவில், எஸ்டேட் குரூப் மேலாளர் திம்பையா, புதிய ஸ்மார்ட் கிளாஸ்சை துவக்கி வைத்து பேசியதாவது:மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திறம்பட படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் முடீஸ் பவுண்டேஷன் சார்பில் பரிசும், தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி கற்க கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.இவ்வாறு, பேசினார்.விழாவில், பள்ளி கல்விக்குழு செயலாளர் ஜான்சன், பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்