ஜனவரி இறுதிக்குள் பள்ளி பராமரிப்பு நிதி
கோவை: கோவையில் உள்ள, 1,205 அரசுப்பள்ளிகளுக்கு இரண்டாம் கட்ட பள்ளி பராமரிப்பு நிதி, ஜன., மாதத்தில் வழங்கப்படவுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கோவை மாவட்டத்தில், 1,205 பள்ளிகளுக்கு, 2 கோடியே 13 லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாய், முதற்கட்ட பராமரிப்பு நிதியாக, கடந்தசெப்., மாதம் வழங்கப்பட்டது. இரண்டாம்கட்ட நிதி, அடுத்தமாதத்திற்குள் வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் எமிஸ் இணையதளத்தில் உள்ளது. 2021-22 கல்வியாண்டு மாணவர் எண்ணிக்கை பொறுத்து, மத்திய அரசு நிதி விடுவித்துள்ளது. முதற்கட்ட நிதி ஏற்கனவே பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள தொகை, அடுத்த மாதத்தில் வழங்கப்படவுள்ளது. செலவினங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும் என்றனர்.