உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்களுக்கு சேவை விருது

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று விருதுகள் வழங்கி கவுரவித்தார்.சிறந்த நிறுவனத்திற்கான விருது, துாத்துக்குடி மாவட்டம், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனத்திற்கும்; சிறந்த ஆசிரியருக்கான விருது, திருச்சியை சேர்ந்த வாசுகி தேவி, கிருஷ்ணகிரியை சேர்ந்த அருண்குமார், மதுரையை சேர்ந்த பாக்கியமேரி; சிறந்த சமூகப் பணியாளர் விருது மோகன் என்பவருக்கும் வழங்கப்பட்டது.சிறந்த பணியாளர் மற்றும் சுய தொழில் புரிவோருக்கான விருது, நீலாவதி, சுதீஷ்குமார், முத்துக்குமார், விஜயலட்சுமி, சவுந்திரவள்ளி, ஜாக்குலின் சகாயராணி, பிரேம்சங்கர் ஆகியோருக்கும், மாற்றுத் திறனாளிகளை அதிக அளவில் பணி அமர்த்திய நிறுவனத்திற்கான விருது, காஞ்சிபுரம் பச்சையப்பா சில்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது.சிறந்த ஆரம்ப நிலை பயிற்சி மைய ஆசிரியருக்கான விருது, காஞ்சிபுரத்தை சேர்ந்த பாலகுஜாம்பாள், கன்னியாகுமரியை சேர்ந்த ஜெயசீலன்; மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய டிரைவருக்கான விருது சுந்தர்வேலு; கண்டக்டர் விருது தர்சியஸ் ஸ்டீபன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அனைவருக்கும் முதல்வர் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் ஜெயஸ்ரீமுரளிதரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்