மருத்துவ கட்டுரைகளை புத்தகமாக வெளியிட முடிவு
மக்கள் நல்வாழ்வு துறைஅமைச்சர் கூறுகையில், இந்தியாவில் முதன்முறையாக, தமிழகத்தில் பன்னாட்டு மருத்துவ மாநாடு நடந்துள்ளது. மூன்று நாட்கள் நடந்த மாநாட்டில், மருத்துவத்தின் எதிர்காலம் என்ற தலைப்பில், 625 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில், நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பல்வேறு நாடுகளின் வல்லுனர்கள் தெரிவித்த ஆராய்ச்சி குறிப்புகள் தொகுக்கப்பட்டு, புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளது.மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மருத்துவம் போன்ற 27 பிரிவுகளின் கீழ் விவாதங்கள் நடந்தன. இவை அனைத்தும் புத்தகமாக தயாரிக்கப்பட்டு, மத்திய அரசுக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும், என்றார்.