உள்ளூர் செய்திகள்

ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கூட்டம்

மதுரை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர்கள் கழகத்தின் மதுரை மாவட்டக் கிளை பொதுக்குழு கூட்டம், மகளிர் தின விழா மூட்டா அலுவலகத்தில் பேராசிரியர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது.சண்முகசுந்தரம் வரவேற்றார். ஜெகநாதன் செயல் அறிக்கை சமர்ப்பித்தார். தமிழக அரசு உயர்கல்வித் துறையில் குறிப்பாக மாநிலப் பல்கலையில் நிலவும் அசாதாரண கல்விச் சூழலையும், நிதிப் பற்றாக்குறையையும் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சமூக செயல்பாட்டாளர் தீபா நாகராணி பேசுகையில், பெண்களுக்குச் சம உரிமை அளிக்கிறோம் என்று கூறும் ஆண்கள், தன் வீட்டில் எவ்வளவு சுதந்திரம் கொடுக்கிறோம் என்பதை தாங்களே கணக்கிட்டுக் கொள்ள வேண்டும் என்றார். ரோஹிணி தேவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ராஜேந்திரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்