கீழடி அருங்காட்சியகத்தில் பிளாஸ்டிக் சேர்களுக்கு தடை
கீழடி : கீழடி அருங்காட்சியகத்தில் பண்டைய கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் வண்ணம் பிளாஸ்டிக் நாற்காலிகளை தவிர்த்து மர நாற்காலிகள் பயன்படுத்தப்படுகிறது.கீழடியில் இரண்டு ஏக்கரில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயன்படுத்திய 13 ஆயிரத்து 834 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.பத்து கட்டட தொகுதிகளில் ஆறு கட்டட தொகுதிகளில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு தினசரிஇரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.கீழடி அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் பண்டைய கால பொருட்கள் என்பதால் அதனை பார்வையிடும் பார்வையாளர்களுக்கும் அதனை உணர்த்தும் வண்ணம் ஒவ்வொரு அறைகளிலும் பாரம்பரியமான பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.மேலும் அருங்காட்சியக அலுவலர்கள், ஊழியர்கள் பயன்படுத்தும் அனைத்தும் மர நாற்காலிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது பார்வையாளர்கள் அமரவும் மர நாற்காலிகள் ஒவ்வொரு அறையிலும் வைக்கப்பட்டுள்ளன.பண்டைய கால அரண்மனையில் மந்திரிகள் அமர வசதியாக நீளமான நாற்காலிகள் இருபுறமும் லேசான சாய்மானத்துடன் அமைக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற நாற்காலிகள்அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் அமர வைக்கப்பட்டுள்ளன. இது பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.