சக்தி விருது பெற்ற பெண் எழுத்தாளர்கள்
திருப்பூர்: கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ்சங்கம், மக்கள் மாமன்றம் ஆகியோர் சார்பில், பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது வழங்கும் விழா திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள மக்கள் மாமன்ற நுாலகத்தில் நடந்தது. எழுத்தாளர்கள் சுப்ரபாரதி மணியன், சாமக்கோடாங்கி ரவி, துாரிகை சின்னராஜ் ஆகியோர் அறிமுக உரையாற்றினர். இளம்பெண் எழுத்தாளர் உள்ளிட்டோருக்கு சக்தி விருது வழங்கப்பட்டது. முத்தமிழ் சங்கம் பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.